பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 34ஆயிரத்து 574பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 81இலட்சத்து 54ஆயிரத்து 306பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 735பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 65ஆயிரத்து 107பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 808பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 66இலட்சத்து 51ஆயிரத்து 464பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.