ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வொஷிங்டனில் நடைபெற்ற ஊடாக சந்திப்பில், இரு தரப்பு பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த நெட் பிரைஸ்,
‘பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது.
ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்தோம். தலிபான்களுடனான பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அலுவல்ரீதியாகவும் இருந்தது’ என கூறினார்.
தங்கள் வசமுள்ள அமெரிக்க ஊடகவியலாளரை விடுவிக்க வேண்டும் என பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபன்கள் தங்களது செயல்கள் மூலமாகவே மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.