இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தோ – பசுபிக் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பருவநிலை மாற்றம், கடல் கொள்ளை ஆகியவை இந்தோ-பசுபிக் பிராந்திய கடல் பகுதியில் சவால்களாக உள்ளன.
இவற்றைத் தடுக்க கூட்டு செயல்பாடு அவசியம். இதன்மூலம் தொடர் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லலாம். பிராந்திய கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தோ -பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்த சவால்களை சமாளிக்க பல்வேறு நாடுகள் புதிய உத்திகளை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.