பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் 40ஆயிரத்து 41பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை 88இலட்சத்து 97ஆயிரத்து 149பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 43ஆயிரத்து 941பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 207பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 24ஆயிரத்து 795பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 950பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 72இலட்சத்து 32ஆயிரத்து 313பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.