வியட்நாமில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒன்பது இலட்சத்து 585பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 40ஆவது நாடாக விளங்கும் வியட்நாமில் இதுவரை 21ஆயிரத்து 856பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 411பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 54பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 66ஆயிரத்து 415பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து எட்டு இலட்சத்து 12ஆயிரத்து 314பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.