புதிய AY 4.2 வகை கொரோனா தொற்று தமிழகத்தில் இதுவரை பதிவாகவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாதத் தடுப்பு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 90 விழுக்காட்டுக்கு மேல் டெல்டா வகைத் தொற்றுதான் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய திரிபான AY 4.2 பரவி வருவதாகவும் குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.