போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் 30இலட்சத்து எட்டாயிரத்து 294பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் போலந்தில் இதுவரை 76ஆயிரத்து 875பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 387பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 102பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்து 33ஆயிரத்து 875பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 521பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 26இலட்சத்து 97ஆயிரத்து 544பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.