பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 41ஆயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 217பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 91இலட்சத்து 71ஆயிரத்து 660பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 41ஆயிரத்து 181பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 68ஆயிரத்து 322பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 30பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 74இலட்சத்து 62ஆயிரத்து 157பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.