ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட் தொற்றினால் மொத்தமாக, எட்டு இலட்சத்து ஆயிரத்து 690பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 42ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் கொவிட் தொற்றினால், எட்டு இலட்சத்து 79ஆயிரத்து 92பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30ஆயிரத்து 994பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 595பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 74பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 46ஆயிரத்து 408பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 350பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.