உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் இதுவரை மொத்தமாக 30இலட்சத்து ஆறாயிரத்து 463பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்னை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில் இதுவரை 70ஆயிரத்து 146பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 27ஆயிரத்து 377பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 699பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு இலட்சத்து 57ஆயிரத்து 179பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 24இலட்சத்து 79ஆயிரத்து 138பேர் பூரண குணமடைந்துள்ளனர்.