அசல் எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் திட்டமிட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் அசல் எல்லைக்கோட்டு பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் சீன ஜனாதிபதியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக திட்டமிடப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வமான அரசு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் சீன அரசு திட்டமிட்டு தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக இந்தியா பலமுறை குற்றம் சுமத்தியிருந்தது. இருப்பினும் சீனா இதனை மறுத்து வந்தது. இந்த நிலையில், சீனா முதன்முறையாக இந்தியாவின் குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா திட்டமிட்டு ஊடுருவல் செய்து வருவதாக விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.