நாட்டில் நேற்று(ஞாயிற்றக்கிழமை) 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 02 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.