கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6,689 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 935 ஆக காணப்படுகின்றது.
அவர்களில் 13 ஆயிரத்து 875 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9 ஆயிரத்து 876 பேர் தொடந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.