தற்காலிக உரிமங்களை கொண்டிருந்த மேலும் ஒன்பது பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு ஜெர்சி அரசாங்கம் நிரந்தர உரிமங்களை வழங்கியுள்ளது.
பல பிரெஞ்சு படகுகளுக்கு மீன்பிடி உரிமத்தை மறுக்கும் இங்கிலாந்து மற்றும் ஜெர்சியின் முடிவால் முன்பு விரக்தியடைந்த பிரான்ஸ் ஜெர்சிக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்நிலையில் 125 பிரெஞ்சு படகுகளுக்கு தற்போது ஜெர்சி மற்றும் அதைச் சுற்றி மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.