நாட்டின் சில பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலை முதல் கொழும்பு வரை நீரைக் கொண்டுச் செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.