இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 888 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 58 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் ஒரு கோடியே 59 இலட்சத்து 64 ஆயிரத்து 289 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 38 இலட்சத்து மூவாயிரத்து 820 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் மொத்த சனத்தொகையில், 72.82 சதவீதமானோருக்கு முதலாம் தடுப்பூசியும் 63 சதவீதமானோருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.