பிரித்தானியா கடந்த ஆண்டை விட தற்போது ஒப்பிட முடியாத வகையில் சிறந்த நிலையில் உள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டை கொண்டாடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தடுப்பூசி முயற்சியை பாராட்டிய பிரதமர், பிரித்தானியாவில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் இப்போது ஒரு பூஸ்டர் அளவு வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
ஆனால் ஓமிக்ரோனின் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் மருத்துவமனையில் சேர்க்கைகள் குறித்து அவர் எச்சரித்தார்.
பின்னர் வெளியே செல்லும் மக்களை முதலில் கொவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறும், காற்றோட்டத்தின் முக்கியத்துவத்தை நினைவில் கொள்ளுங்கள் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் மீண்டும் கொண்டாடப்பட உள்ளன. ஆனால் லண்டனில் பாரம்பரிய ட்ரஃபல்கர் சதுக்க விருந்து மற்றும் வானவேடிக்கை உட்பட பல நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இப்போது பப்கள், மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களுக்கு கடுமையான விதிகள் உள்ளன. மேலும் மக்கள் கூடும் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் உள்ளன.