அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதல் இன்னிங்சிற்காக அவுஸ்ரேலிய மகளிர் அணி 337 ஓட்டங்களையும் இங்கிலாந்து மகளிர் அணி 297 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.
40 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய அவுஸ்ரேலிய மகளிர் அணி 216 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.
எனவே 256 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக இங்கிலாந்து மகளிர் அணி துடுப்பாடியது.
9 விக்கெட்களை இழந்து தடுமாறியபோதும் கடைசி 13 பந்துகளை தாக்கு பிடித்து போட்டியை இங்கிலாந்து மகளிர் அணி சமநிலை செய்தது.
இப்போட்டியிடின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து மகளீர் அணி சார்பாக ஆட்டமிழக்காது முதல் இன்னிங்ஸில் 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹீதர் நைட் தெரிவு செய்யப்பட்டார்.