பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 43 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
கராச்சி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கொலின் முன்ரோ ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் அசாம் கான் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், நவாஸ் 2 விக்கெட்டுகளையும் அப்ரிடி மற்றும் போல்க்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 43 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஹ்சன் அலி 50 ஓட்டங்களையும் மொஹமட் நவாஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் பந்துவீச்சில், சதாப் கான் 5 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் மொஹமட் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வகாஸ் மக்சூத் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கொலின் முன்ரோ தெரிவுசெய்யப்பட்டார்.