மடகாஸ்கரின் கிழக்கு கடற்கரையில் பட்சிராய் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 20பேர் உயிரிழந்துள்ளதோடு 55,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிக்கு 235 கிலோமீட்டர் (மணிக்கு 146 மைல்) வேகத்தில் காற்று வீசும் வகை 4 சூறாவளியான பட்சிராய், மானஞ்சரி நகருக்கு அருகே தீவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியது.
ஜனவரி 22ஆம் திகதி தாக்கிய மற்றொரு வெப்பமண்டல புயலான அனாவின் விளைவுகளால் ஏற்கனவே தத்தளித்து வரும் மடகாஸ்கருக்கு மேலும் பேரழிவைக் கொண்டு வந்த பட்சிராய் சூறாவளி பெப்ரவரி 5ஆம் திகதி மடகாஸ்கரின் கடற்கரையை தாக்கியது.
இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய சூறாவளியான பட்சிராய், மடகாஸ்கரை விட்டு வெளியேறும் போது மேலும் சிதறி மொசாம்பிக்கிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.
பட்சிராய் சுமார் 3,000 குடியிருப்புகள் மற்றும் அரசு கட்டடங்களை அழித்ததுடன், மானஞ்சரி மற்றும் அருகிலுள்ள நகரங்களில் 5,700 பேரை வெள்ளத்தில் மூழ்கடித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலின் அழிவு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா, திங்கள்கிழமை மனஞ்சரி நகருக்குச் சென்றார்.
இதன்போது இடர் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய அலுவலகத்தின் தலைமை இயக்குனர் ஜெனரல் எலாக் ஆண்ட்ரியன்கஜா கூறுகையில்,
‘அரசாங்கம் செய்யும் முதல் விடயம், நிர்வாக கட்டடங்களை எவ்வாறு சரிசெய்தல் மற்றும் மறுசீரமைப்பது, சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிப்பது.
இந்தப் பகுதிகளில், குறிப்பாக மனஞ்சரியில் பல நிர்வாகக் கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன’ என கூறினார்.