மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.
அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்ய குமார் யாதவ் 64 ஓட்டங்களையும் ராகுல் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் ஓடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரோச், ஹோல்டர், அகீல் ஹொசைன் மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 238 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 46 ஓவர்கள் நிறைவில் 193 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷமர் ப்ரூக்ஸ் 44 ஓட்டங்களையும் அகீல் ஹொசைன் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்னா 4 விக்கெட்டுகளையும் சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ், யுஸ்வேந்திர சஹால், வொஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசீத் கிருஸ்னா தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.