உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது ஷெல் தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டுள்ளன.
குறித்த தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று நகர முதலவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் முதல் இரவோடு இரவாக கார்கிவ் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், அனைத்து ரஷ்ய தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
மேலும் குறித்த தாக்குதலில் ரஷ்யாவும் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்தது என்றும் கார்கிவ் முதலவர் குறிப்பிட்டுள்ளார்.