நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியினால் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னரே, ஜயந்த சமரவீர தனது இராஜாங்க அமைச்சு பதவியினை இராஜினாமா செய்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.