• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சவுதி அரேபியாவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

Anoj by Anoj
2022/03/26
in உலகம்
90 1
A A
0
40
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரியாத்தில் உள்ள பிற எண்ணெய் நிலையங்களை குறிவைத்து யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளில்லா விமானத்தின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த தாக்குதலின் போது எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.

இதே எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல்களை நடத்திய நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ கார் பந்தயத்தை தடுக்கும் விதமாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான வடக்கு ஜெட்டா எண்ணெய்க் கிடங்கு, மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்கள் வந்திறங்கும் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் டீசல், கேசோலின், ஜெட் விமான எரிபொருள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் தொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிளர்ச்சியாளர்கள் நகரில் உள்ள தண்ணீர் தொட்டியை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால், தாக்குதலில் சில வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.

மற்றொரு தாக்குதல், யேமன் எல்லைக்கு அருகே சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் துணை மின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரம்கோ குழுவின் வளங்களான, ராஸ் தனுரா மற்றும் ராபிக் சுத்திகரிப்பு நிலையங்களை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியதாக ஹெளதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா உறுதிப்படுத்தினார்.

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய இடங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சாரியா மேலும் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவும், மாநில அரசாங்கமும் நடத்தும் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் இதை முதலில் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் உறுதிப்படுத்தியது.

ஜிசான், நஜ்ரான், ராஸ் தனுரா மற்றும் ரபீக் ஆகிய இடங்களில் எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் முக்கிய நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யேமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.

இதில் யேமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

Related

Tags: எண்ணெய் சேமிப்புக் கிடங்குகிராண்ட் பிரிக்ஸ்சவுதி அரேபியாதாக்குதல்ஹெளதி கிளர்ச்சியாளர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Next Post

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை !

Related Posts

	37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!
இங்கிலாந்து

2026-03-18
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
ஆசிரியர் தெரிவு

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!
உலகம்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

2026-03-18
Next Post
இலங்கை தொடர்பில்   சர்வதேச நாணய நிதியத்தின்  அறிக்கை !

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை !

வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடை!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் மே. தீவுகள் 232-8

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
	37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

 37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

0
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

0
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

0
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

0
வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18

Recent News

	37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

 37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

2026-03-18
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.