டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 66 சதம். விற்பனை பெறுமதி 330 ரூபாய் 75 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபாய் 51 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 35 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபாய் 45 சதமாகவும் பதிவாகியுள்ளது.