பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் ஷா மஹ்மூத் குரேஷியும் ஞாயிற்றுக்கிழமை அவரது வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தார்.
எனினும், பாகிஸ்தானுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மொத்தம் உள்ள 342 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது.
இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான்கான் பெற்றார்.