சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 9.15க்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவி மற்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அத்தோடு, இந்த வார நாடாளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இம்தியாஸ் பாகீர் மாகரின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.