ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(30) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் 2 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
இதேவேளை, இன்றைய தினம் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படமாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.