அமெரிக்காவில் நடைபெற்று வந்த 18ஆவது உலக தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நிறைவடைந்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான உலக தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடர், நேற்றுடன் நிறைவடைந்தது.
பத்து நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில்,
சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த 1,700க்கும் அதிகமான தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
தொடரின் நிறைவில், பல்வேறு உலகச் சாதனைகளுடன் அமெரிக்கா 33 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இதில் 9 வெள்ளி பதக்கங்கள், 11 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.
எத்தியோப்பியா, தலா 4 தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் அடங்களாக மொத்தம் 10 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.
ஜெமைக்கா, 2 தங்க பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கங்கள், 1 வெண்கல பதக்கத்துடன் மொத்தம் 10 பதக்கங்களாக மூன்றாவது இடத்தை பிடித்தது.
போட்டியை நடத்திய அமெரிக்கா, உலக தடகள சம்பியன்ஷிப்பில் முதல் முறையாக 33 பதக்கங்கள் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.