நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் நேற்று ( புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு கொரோனா தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 6ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக அதிகளவான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து செயற்படுவதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.