நெஷனல் பேங்க் பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் கரோலினா ப்ளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
டொராண்டோவில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில், முன்னாள் உலகின் முதல்நிலை வீராங்கனையான கரோலினா ப்ளிஸ்கோவா, பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மியாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பீட்ரிஸ் ஹடாட் மியா முதல் செட்டை 6-4 எனவும் டை பிரேக் வரை நீடித்த இரண்டாவது செட்டை 7-6 எனவும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில், மற்றுமொரு முன்னாள் உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை, ஹடாட் மியா எதிர்கொள்ளவுள்ளார்.