நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என முன்னிலைப் பெற்றுள்ள அவுஸ்ரேலியா தொடரையும் வென்றுள்ளது.
கெய்ர்ன்ஸின் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 61 ஓட்டங்களையும் ஸ்டார்க் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 3 விக்கெட்டுகளையும் சவுத்தீ மற்றும் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 196 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 33 ஓவர்கள் நிறைவில், 82 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 17 ஓட்டங்களையும் மிட்செல் சான்ட்னர் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் சீன் அபோட் 2 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.