2022ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.