மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும்.
காற்று தென்மேற்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 20-35 கிலோ மீற்றர்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.