ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பூர்வாங்க பரிசீலனையின் பின்னர், நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.