நாடாளுமன்றத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு வாய்மொழி பதில்களுக்காக காத்திருக்கும் 50 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நாள் முழுவதும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர, நாளை முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை, ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்வழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை முதல் அரசாங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான நேரத்தை அரை மணித்தியாலம் நீடிக்கவும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க அந்த நேரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாலை 4.30 மணியுடன் முடிவடையவுள்ள அரசாங்க விவகாரங்கள் மீதான விவாதத்திற்கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணி வரை மீதமுள்ள 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு ஒரு நாள் ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பரிசீலிப்பதற்காக நீதித்துறை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு நாளை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.
இந்த சட்டமூலம் மீது எதிர்வரும் 6 மற்றும் 7ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளதுடன், சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு ஆலோசனைக் குழு கூடி இந்த சட்டமூலத்தை பரிசீலிக்கும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.