2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்படி, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் மீது விவாதம் நடைபெற்றிருந்தது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ச்சியாக இடம்பெற்று, நேற்று முன்தினம் 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.