லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 14ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
பல்லேகல- சர்வதேச மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, 13.5 ஓட்டங்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பிரமோத் மதுஷான் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் தசுன் சானக 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 5 விக்கெட்டுகளையும் வெண்டர்சே 2 விக்கெட்டுகளையும் லக்மால் மற்றும் கரீம் ஜெனட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 90 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு-ஸ்டார்ஸ் அணி, 11.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், பிரமோத் மதுஷான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கசுன் ராஜித தெரிவுசெய்யப்பட்டார்.