கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், இரண்டாவது காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அல்பைட் விளையாட்டரங்களில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணியும் மொரோக்கோ அணியும் மோதின.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லுஸைல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி, ஆர்ஜெண்டீனா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதற்கு முன்னதாக பிரான்ஸ் அணி, 1998ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டங்களை வென்றது. அதேபோல ஆர்ஜெண்டீனா அணி 1978ஆம் மற்றும் 1986ஆம் ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டங்களை வென்றது.