தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் இதன்போது முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.