தென் கொரியாவுடன் கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகள் பற்றி அமெரிக்கா விவாதிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவுடன் கூட்டு அணு ஆயுதப் பயிற்சி பற்றி விவாதிக்கிறீர்களா? என வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகவியலாளர் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவும் தென்கொரியாவும் அமெரிக்க அணுசக்தி சொத்துக்கள் தொடர்பான பயிற்சிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் தெரிவித்திருந்தார்.
சோசுன் இல்போ பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்து கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.