மத்திய செனகலில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 40பேர் உயிரிழந்தனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஒன்று டயர் வெடித்து, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய நகரமான காஃப்ரைன் அருகே நடந்த விபத்தில், காயமடைந்தவர்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அவர்கள் மேலும் கூறினார்.
ஜனாதிபதி மேக்கி சால் மூன்று நாட்கள் துக்க தினத்தை அறிவித்துள்ளார் மற்றும் வீதி பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார்.
செனகலில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, ஆனால் இது சமீபத்திய ஆண்டுகளில் மிக மோசமான ஒன்றாகும்.
இதேவேளை, கென்யாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21பேர் உயிரிழந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து உகாண்டாவில் இருந்து கென்யா எல்லையை கடந்த போது விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் கென்யாவைச் சேர்ந்தவர்கள், ஆனால் எட்டு உகாண்டா நாட்டவர்களும் அடங்குவர்.