இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலின் போதே அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 43புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் பெறப்படவுள்ளது.
மேலும் இந்த மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம வைத்தியசாலை உட்பட புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.