இந்தியாவை பிரதிபலித்து யாழ். வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.