குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தை மறுசீரமைப்பு செய்து வந்த ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் பிறப்பித்து மோர்பி தலைமை குற்றவியல் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.
அவரை கைது செய்ய கடந்த 70 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஜெய்சுக் பட்டேல் கைது செய்யப்படாதது குறித்தும், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்படாதது தொடர்பாகவும் அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
குஜராத்தின் மோர்பி நகரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொங்கு பாலம் அறுந்து விழுந்தததில் 134 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.