ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ்வை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், 7-6, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டொமி போலை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 7-5, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.