ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் பிரதமரை கொல்ல மாட்டேன் என உறுதிமொழி பெற்றதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை பிற்பகுதியில் அவரது யூடியூப் சேனலில் இடுகையிடப்பட்ட ஒரு நேர்காணலில், இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்து மணிநேர நேர்காணலில், பல விஷயங்களைத் கூறிய பென்னட், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியைக் கொல்ல விரும்புகிறீர்களா என்று புடினிடம் கேட்டதாகக் கூறுகிறார்.
அதற்கு புடின் 100 சதவீதம் நான் ஸெலென்ஸ்கியைக் கொல்ல மாட்டேன் எனகூறியதாக அவர் கூறினார். மேலும், இந்த புடினின் உறுதிமொழியை ஸெலென்ஸ்கி அறிந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும் புடின் ஒரு நிபுணத்துவ பொய்யர் என்று கருத்து தெரிவித்தார்.
‘கடந்த காலங்களில், புடின் கிரிமியாவை ஆக்கிரமிக்க மாட்டோம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை மீற மாட்டோம், உக்ரைனை ஆக்கிரமிக்க மாட்டோம் என்று வாக்குறுதிகளை அளித்துள்ளார், இருப்பினும் அவர் இந்த விடயங்களைச் செய்தார். ஏமாறாதீர்கள். ஒவ்வொரு முறையும் அவர் எதையும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்து பின்னர் அவர் அதை செய்வார் என’ கூறினார்.
உக்ரைனுடனான ரஷ்யாவின் 11 மாத போரின் ஆரம்ப நாட்களில் பென்னட் ஒரு இடைத்தரகராக வெளிப்பட்டார். கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவிற்கு ஒரு பயணத்தில் போரின் போது புடினை சந்தித்த சில தலைவர்களில் ஒருவராக ஆனார்.