நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய 20 இலட்சம் ஏழைக் குடும்பங்களுங்கு தலா 10 கிலோ அரிசியினை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெற்ற 18 ஆயிரம் பேருக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகையை கட்டம் கட்டமாக வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.