தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், திட்டமிட்டப்படி தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களுக்குள் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை தபால் மூல வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி தொடர்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தற்போது திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.