இந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தூரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 88 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதற்கமைய அவுஸ்ரேலிய அணிக்கு 76 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, போட்டியின் மூன்றாம் நாளான இன்று 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு தொடரை விட்டுக்கொடுக்காமல் மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று அவுஸ்ரேலியா அணி தொடரை தக்கவைத்துள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த நாதன் லியோன் தெரிவுசெய்யப்பட்டார்.